உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி

சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி

சாத்துார் : சாத்துார் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் நகரில் சுமார் 100 அடி அகலம் உள்ள வடக்கு ரத வீதி ரோடு தற்போது ஆக்கிரமிப்பு கடைகளால் 50 அடி ரோடாக மாறிவிட்டது. ரதவீதியின் இருபுறமும் கடைகள் நடத்தி வருபவர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்து கடையின் கூரை அமைத்துள்ளனர்.இவை தவிர மாலை நேரத்தில் பாஸ்ட்புட் கடைகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. வடக்கு ரத வீதியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் நடந்து செல்லவும் போதுமான இடவசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து காய்கறி மார்க்கெட்டுக்கு டூ வீலரில் வரும் சிறிய வியாபாரிகளும் உள்ளூர் மக்களும் ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாகவும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை