உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆனைக்குட்டத்தில் ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பையால் அவதி

ஆனைக்குட்டத்தில் ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பையால் அவதி

சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் பஸ் ஸ்டாப் அருகே விருதுநகர் செல்லும் மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிவகாசி வடமலாபுரம் ஆனைக்குட்டம் விருதுநகர் ரோட்டில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். வடமலாபுரம் பாலத்தை தாண்டி ஆனைக்குட்டம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதிலிருந்து எழும் புகை ரோடு முழுவதையும் மறைத்து விடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப் படுகின்றனர். அடுத்தடுத்து வாகனங்கள் சென்று கொண்டே இருப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே இங்கு குப்பையை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ