மேலும் செய்திகள்
பணியில் போதை: எஸ்.எஸ்.ஐ., மாற்றம்
25-Dec-2024
ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சம்பவத்திற்கு பின் இனி இரவு காவல் பணியில் இரண்டு பெண் போலீசாரை நியமிக்க எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., சக பெண் போலீஸிடம் தவறாக நடக்க முயன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்டேஷன் பணியில் பெண் போலீஸ் தனியாக இருந்ததே காரணம் என தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் இரவு பாரா பணியில் பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு செய்யும்போது குறைந்தது இரண்டு பேரையாவது நியமித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
25-Dec-2024