இருவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவில்லிபுத்துார்: திருத்தங்கலைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 21, நண்பர் சதீஷ் 21. இருவரும் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்துார் சிவகாசி நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே நின்றுள்ளனர். அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் இவர்களுடன் வாக்குவாதம் செய்து இருவரையும் வெட்டி விட்டு தப்பிவிட்டனர். ஆறுமுகம் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், சதீஷ் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.