லிப்ட் கேட்டு டூவீலர் பறிப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் லிப்ட் கேட்டு ஏறிய இருவர் சாய் கிருஷ்ணா 24,என்பவரின் டூவீலரை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ், நகைக்கடை உரிமையாளர். இவரது மகன் சாய்ராம் கிருஷ்ணா. இவர் நேற்று முன் தினம் இரவு 12:30 மணிக்கு தனது நண்பரை கூமாபட்டியில் இறக்கி விட்டு விட்டு திரும்பும் போது, ராமசாமியாபுரத்தில் 2 பேர் லிப்ட் கேட்டு வந்துள்ளனர். வயல் காட்டிற்கு அருகே வரும்போது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால் பைக்கை பறித்து, அவரையும் ஏற்றிக்கொண்டு வத்திராயிருப்பு நாடார் பஜாரில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். வத்திராயிருப்பு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.