உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில்கள் நடுவே பொங்கிவரும் பாதாள சாக்கடை கழிவுநீர்

கோயில்கள் நடுவே பொங்கிவரும் பாதாள சாக்கடை கழிவுநீர்

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி பூங்கா ஒட்டி கோயில்கள் நடுவே 4 மாதங்களுக்கு மேல் பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் நகராட்சி 8வது வார்டு சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா அருகே அக்ரஹாரம் தெரு செல்லும் பாதையில் விநாயகர் கோயில், சிவன் கோயில் இடையே அமைந்துள்ள மூன்று பாதாள சாக்கடை மேன் ஹோல்கள் வழியே நான்கு மாதங்களுக்கு மேல் காலை, மாலையில் கழிவுநீர் பொங்கி வெளியேறி அப்பகுதியில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களும், இப்பகுதி மக்களும் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து ராஜேஷ் கண்ணன்: ஏற்கனவே இது குறித்து செய்தி வெளியிட்டு தற்காலிக பணிகள் நடந்தது. மீண்டும் அதே பிரச்னை தொடங்கி காலை இரண்டு மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் கழிவு நீர் பொங்கி ரோட்டில் வெளியேறி தேங்குவதால் சுகாதார கேடு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிப்பு போன்ற சிக்கல் உருவாகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறியும் இது வரை தீர்வு காண முடியாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி