உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு

மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். சாத்துார் - கோவில்பட்டி மெயின்ரோட்டில் கிருஷ்ணன் கோயில் விலக்கு அருகே 10 நாட் களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் அதிக அளவில் வெளியேறியது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 4 நாட்களுக்கு முன்பு சாக்கடை குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் இன்று வரை குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை. தற்போது பண்டிகை காலமாக உள்ளதால் இந்த பகுதியில் உள்ள நகைக்கடை பஜாருக்கு வரும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆமை வேகத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வியா பாரிகளும் மக்களும் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ