உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை பணிகள்: பள்ளி மாணவர்கள் பாதிப்பு

பாதாள சாக்கடை பணிகள்: பள்ளி மாணவர்கள் பாதிப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் நகர் பகுதியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பள்ளி மாணவர்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளதாக பெற்றோர் புலம்புகின்றனர். அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஓராண்டு காலமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக புறநகர் பகுதிகளில் பணிகள் செய்யப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது நகருக்குள் பணிகளை துவங்கியுள்ளனர். ரயில்வே பீடர் ரோடு, எஸ்.பி.கே., பள்ளி ரோடு, டெலிபோன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளை தோண்டி சம்ப் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்க, நடந்தும் பள்ளி வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். பணிகள் நடப்பதால் ரோடு செல்ல முடிவதில்லை. பள்ளி வாகனங்கள் வர முடியவில்லை. இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதில் சிரமப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விடுமுறை நாட்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை செய்யலாம் எனவும், அல்லது மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்பது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை