உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடையால் -தொற்று நோய் அபாயம்

பாதாள சாக்கடையால் -தொற்று நோய் அபாயம்

ராஜபாளையம் : ராஜபாளையம் கலங்காப்பேரி மெயின் ரோட்டில் ஒரு மாதமாக ரோட்டில் பொங்கி வழிந்து தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்பதோடு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மொட்டமலை செல்லும் கலங்காபெரி மெயின் ரோடு அமைந்துள்ளது. கலங்காப்பேரி, புதுார், ராஜீவ் காந்தி நகர், அயோத்தி ராம் நகர், ஆர்.ஆர் நகர், சத்திரப்பட்டி வழி ஸ்ரீவில்லிபுத்துார் செல்வோர் என தினமும் கனரக வாகனங்கள் முதல் அனைவருக்குமான ஒரே பாதையாக உள்ளது.மெயின் ரோட்டில் ஆர்.ஆர் நகர் குடியிருப்பில் இருந்து குப்பை கிடங்கு அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதாள சாக்கடை இணைப்பு குழாய் செல்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மெயின் ரோட்டின் 100 மீட்டர் இடைவெளியில் மூன்று இடங்களில் கழிவு நீர் வெளியேறி வருவதுடன் தேங்கி நிற்கிறது.இதை கடந்து செல்லும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் மீது கழிவு நீர் தெரிப்பதுடன், அருகாமை வாசிப்பவர்கள் துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். தொடரும் பிரச்சனையை உடனடி தீர்வு காண வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி