உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசின் கொள்கை முடிவை மீறி 3 வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை ரத்து செய்ய சங்கத்தினர் கோரிக்கை 

அரசின் கொள்கை முடிவை மீறி 3 வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை ரத்து செய்ய சங்கத்தினர் கோரிக்கை 

விருதுநகர்: அரசின் கொள்கை முடிவை மீறியும் மாவட்ட நிர்வாகம் 3 வி.ஏ.ஓ.,க்கள் மீது 17பி குற்றக்குறிப்பாணை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதன் மாவட்ட தலைவர் முருகேசன் கூறியதாவது: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தீர்ப்பாணையை காரணம் காட்டி, வி.ஏ.ஓ.,க்கள் பணி கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் என 17பி குற்றக் குறிப்பாணை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.வி.ஏ.ஓ.,க்கள் தங்களது பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் கடமைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வி.ஏ.ஓ.,க்களுக்கு அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டி தரும் வரை கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் எனும் முதன்மை ஆணையர் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு.இந்த கொள்கை முடிவுடன் கூடிய சங்க தீர்மானம் 2024 அக்.7 அன்றே கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக். 17 ல் மாவட்ட நிர்வாகத்தால் வி.ஏ.ஓ.,க்களுக்கு 17பி குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஊழியர் விரோத போக்கோடும், ஊழியர்களை பழிவாங்கும் நோக்கோடும் நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு கண்டிக்கதக்கது. அரசின் கொள்கை முடிவை மீறி 3 வி.ஏ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ரத்து செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !