உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனங்களில் ஹைபீம் பயன்படுத்துவதால் சிரமம்; ஓட்டுவோரின் கண்கள் கூசுவதால் விபத்து அச்சம்

வாகனங்களில் ஹைபீம் பயன்படுத்துவதால் சிரமம்; ஓட்டுவோரின் கண்கள் கூசுவதால் விபத்து அச்சம்

மாவட்டத்தில் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. இவற்றின் முகப்பில் எல்.இ.டி., எச்.ஐ.டி., ஹேலஜன் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிரே வாகனங்கள் இல்லாத போதும், மிகவும் இருளான பகுதிகளில் மட்டுமே ஹைபீம் விளக்குகள் பயன்படுத்த வேண்டும். வேகமாக சென்று முந்துவதை எச்சரிக்கவும் இதை பயன்படுத்தலாம்.ஆனால் பல வாகன ஓட்டிகள் எந்நேரமும் அதிக வெளிச்சம் தரும் வகையில் ஹைபீம் விளக்குகளை எரிய விடுகின்றன. இது எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச செய்கிறது. பார்வை தடுமாற்றம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஹைபீம் விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது.மாநில நெடுஞ்சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏராளம் உள்ளன. பெரும்பாலான ரோடுகளில் பிரதிபலிப்பான்கள் பொருத்தாத சூழல் உள்ளது. இரவு நேரத்தில் ஹைபீம் எரிய விடும் போது எதிரே வரும் வாகன ஓட்டி திருப்பம் தெரியாது விளைநிலங்களில் வண்டியை விட்டு விபத்தை சந்திக்கின்றனர். ரோட்டின் இரு புறங்களிலும் வெள்ளை, மஞ்சள் கோடு போட்டிருக்க வேண்டும். அவ்வாறு போட்டிருந்தாலும் அதில் களைச் செடிகள், மண் மேவி மறைத்து விடுகினறன. அதிக ஹைபீம் விளக்கு வெளிச்சத்தால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு, ரோட்டை விட்டு விலகிச் செல்ல நேரிடுகிறது.இது போன்று கூடுதல் விளக்குகளைப் பொருத்தி இரவு நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு கண் கூசுகிற அளவுக்கு எரிய விட்டுச் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராத விதிக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ