உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிரம்பியது வல்லம்பட்டி கண்மாய் மகிழ்ச்சியில் விவசாயிகள்

நிரம்பியது வல்லம்பட்டி கண்மாய் மகிழ்ச்சியில் விவசாயிகள்

சாத்துார்: சாத்துார் வல்லம்பட்டி பெரிய கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வல்லம்பட்டி பெரிய கண்மாய் மூலம் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கண்மாய் நிரம்புவதன் மூலம் அச்சங்குளம், மீனாட்சிபுரம், பந்துவார் பட்டி, பனையடிப்பட்டி,உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வல்லம்பட்டி கண்மாய் நேற்று நிரம்பி மறுகால் பாய்ந்தது.இந்த தண்ணீர் முழுவதும் வைப்பாற்றில் கலந்து சங்கரநத்தம் தடுப்பணை வழியாக பெரிய கொல்லப்பட்டி கண்மாயை வந்தடைந்தது. அடுத்தடுத்து கண்மாய் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ