மேலும் செய்திகள்
கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்
01-May-2025
விருதுநகர்:கூட்டாளியை எரித்து கொலை செய்தவழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட ஏழு பேர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான செந்தில்குமார் 38, மாயமானார். அவரது மனைவி முருகலெட்சுமி 2021ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் விசாரணையில் இரட்டைக்கொலை வழக்கு ஒன்றில் செந்தில்குமாரால் தானும் போலீசில் சிக்கவிடக்கூடும் எனக்கருதி ஒரு கும்பல் மூலம் செந்தில்குமாரை சென்னையில் சுட்டு கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வரிச்சியூர் செல்வம் வீசியது தெரியவந்தது. இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை 2023 ஜூன் 21ல் போலீசார் கைது செய்து சாத்துார் ஜே.எம்.,2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வந்தார்.இந்த வழக்கு விருதுநகரில் உள்ள ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றி ஜே.எம்.2., நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டார்.
01-May-2025