உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் வாகன காப்பகம்

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் வாகன காப்பகம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் டூவீலர்கள் நிறுத்துவதற்கான வாகன காப்பகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பாலம், லிப்ட், நிழற்குடை, இருக்கைகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே கோச் பொசிஷன் போர்டுகள், வாகன காப்பகம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் டூவீலர்கள் நிறுத்துவதற்காக வாகன காப்பகம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்படி சைக்கிள் , ஸ்கூட்டர்கள் முதல் 6 மணி நேரத்திற்கு ரூ.10, 12 மணி நேரத்திற்கு வரை ரூ.15, 24 மணி நேரத்திற்கு ரூ.20, மாத கட்டணமாக ரூ.375 வசூலிக்கப்படுகிறது.ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வருபவர்களின் வாகனங்கள் 6 நிமிடம் வரை நின்று செல்ல இலவசமாகவும், அதற்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படுமென ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை