மேலும் செய்திகள்
விதிமீறும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு
22-Jul-2025
விருதுநகர்: விருதுநகர் -- சிவகாசி ரோட்டில் சில ஓட்டல்கள் ஆக்கிரமித்து தகர செட் அமைத்து இருப்பதால் வாகனங்கள் ரோடு ஓரங்களில் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் நீடிக்கிறது. விருதுநகர் -- சிவகாசி ரோடு ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்வதற்கான முக்கிய ரோடாக இருப்பதால் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள், கனரக வாகனங்கள், வேன்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் சென்று வருகிறது. இந்த ரோட்டில் உள்ள ஓட்டல்கள், டீ ஸ்டால்களுக்கு செல்வதற்காக ரோட்டின் ஓரத்தில் லாரிகள், வேன்கள், கார்களை நிறுத்தி செல்கின்றனர். ஆனால் நிறுத்தப்பட்ட வாகனங்களை மீண்டும் ரோட்டில் திருப்பும் போது பின்னால் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் இயக்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஓட்டல்களுடன் இயங்கும் டீ ஸ்டால்கள் பார்க்கிங் வசதிக்கு தேவையான இடங்களை ஒதுக்காமல் ரோடு வரை தகர செட் அமைத்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் ரோடு ஓரங்களில் வாகனங்ளை நிறுத்தி விபத்து ஏற்படுத்தும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே சிவகாசி ரோட்டில் ரோடு வரை ஆக்கிரமித்து தகர செட் அமைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து வாகன ஓட்டிகளின் விபத்து அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Jul-2025