வெம்பக்கோட்டை அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு
சிவகாசி : வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திரா நகர் விஜயகரிசல்குளம், வனமூர்த்தி லிங்கபுரம் குண்டாயிருப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல், சுற்றிலும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. இப்பள்ளியின் முன்புறம் மட்டும் சிறிய அளவிலான கம்பி வேலி போடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளின் முட்புதர்களாக இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் நடமாடி மாணவர்களை அச்சப்படுத்துகிறது. பள்ளியில் ஆய்வகத்தில் விலை உயர்ந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவற்றிற்கு பாதுகாப்பு இல்லாமல் திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்து வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.