உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடுக்க விற்பனையாளர்கள் கோரிக்கை

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடுக்க விற்பனையாளர்கள் கோரிக்கை

சிவகாசி:தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திர சேகரன் கூறியதாவது: தீபாவளி நெருங்கும் நிலையில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிமம் வழங்க வேண்டும். ஆன்லைன் பட்டாசு விற்பனை உரிய அனுமதி இல்லாமலும், ஜி.எஸ்.டி. வரி கட்டாமலும் முறைகேடாக நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே ஆன்லைன் தளங்களை முடக்க வேண்டும். விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் பட்டாசு வணிகம் மூலம் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் 100 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தொடர் வெடி விபத்து, ஆய்வு நடவடிக்கைகளால் 30 சதவீத பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தீபாவளிக்கு பட்டாசு விலை உயர வாய்ப்புள்ளது. மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஏமாற வேண்டாம். நேரடியாகவோ அல்லது பட்டாசு கடைகளை தொடர்பு கொண்டோ பட்டாசுகள் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சங்க பொது செயலாளர்கள் இளங்கோவன், ரவிதுரை, பொருளாளர் கந்தசாமி ராஜன், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி