உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கான்சாபுரத்தில் கால்நடை மருத்துவமனை தேவை

கான்சாபுரத்தில் கால்நடை மருத்துவமனை தேவை

வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இக்கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் பெரும்பாலான வீடுகளில் பசு மாடுகள் வளர்க்கப்படுகிறது. மேலும் ஏராளமான மலை மாடுகளும் உள்ளது. மேலும் விவசாய நிலங்களில் கிடை போடுவதற்கு ஏராளமான மாடுகள் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால் கூமாபட்டி, வத்திராயிருப்புக்கு மாடுகளை விவசாயிகள் அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பண விரயம், நேர விரயத்திற்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். இதனால் கான்சாபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர். இது குறித்து இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, தாலுகா செயலாளர் கோவிந்தன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை