உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துணை இயக்குனர் அஜித்குமார், வத்திராயிருப்பு துணை தாசில்தார் ரவி, சிவகாசி தீயணைப்பு அலுவலர் செல்வராஜ் குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீவில்லிபுத்துார் சண்முகசுந்தரபுரத்தில் ஜெயராம் பயர் ஒர்க்சில் சோதனை செய்தனர்.அப்போது விதிமுறைக்கு எதிராக விபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு தயாரிப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்து அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக உரிமையாளர் வடிவேல், பங்குதாரர் ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை