உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டல்களில் விதிமீறல்கள்: கண்காணிக்க எதிர்பார்ப்பு

ஓட்டல்களில் விதிமீறல்கள்: கண்காணிக்க எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப் பகுதிகளில் செயல்படும் உணவு பொருள் விற்பனை கடைகளில் விதிமுறை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பார்சலுக்கு உபயோகப்படுத்துவதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராஜபாளையத்தில் அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட், டீ கடைகளில் உணவுப் பொருட்களில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக், பயன்படுத்தப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப்பட்ட உணவுகள் நடைமுறையில் உள்ளன. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சுகாதார விதிமுறைகள் பின்பற்றாது காற்றில் பறந்து வரும் நிலையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாழை இலைக்கு பதில் பார்சல் மற்றும் உணவு பரிமாறுவதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீக்கடையில் கூட பிளாஸ்டிக் கவர்களிலும், ஓட்டல்களில் குழம்புகளை கொதிநிலையில் கட்டி கொடுக்கின்றனர். இது தவிர பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், தடை செய்யப்பட்ட நிறமிகளும், மசாலாக்கள், உபயோகப்படுத்திய எண்ணெய் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது. பெரும்பாலான பூ, இறைச்சி, ஓட்டல்களில் எந்த தடையும் இன்றி பிளாஸ்டிக் கவர்களில் பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பாதிப்பு நீர் நிலைகளில் அடைப்பு போன்ற சிக்கல் ஏற்படுத்துவதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகுந்த இடைவெளிகளில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !