உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் டிச. 27, 28, ஜன. 3, 4ல் சிறப்பு முகாம்

 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் டிச. 27, 28, ஜன. 3, 4ல் சிறப்பு முகாம்

விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில், வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்' எனும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார். விடுபட்டவர்கள் டிச. 27, 28, ஜன. 3, 4ல் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் வழங்கலாம். வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மைதானத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களில் ஊர்வலம் நடந்தது. சிறப்பு முகாம் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம். 2026 ஜன. 1ல் 18 வயது பூர்த்தியானவர்கள், பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, திருத்தங்கள் செய்ய படிவம் 8, பெயர் நீக்கத்திற்கு படிவம் 7ஐ பூர்த்தி செய்து ஜன. 18 வரை அந் தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தாசில்தார் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம். 2026 ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியாகுபவர்களும் தற்போதே படிவம் 6ஐ சமர்ப்பிக்கலாம்.அந்தந்த நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை, https://voters.eci.gov.inமூலம் ஆன்லைன் வாயிலாகவும், டிச. 27, 28, ஜன. 3, 4ல் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் களிலும் வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை