உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாயில் வீசப்பட்ட வாக்காளர் அட்டைகள்

கண்மாயில் வீசப்பட்ட வாக்காளர் அட்டைகள்

தளவாய்புரம்:விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே கண்மாயில் வாக்காளர் அடையாள அட்டைகள் சிதறி கிடந்தது குறித்து வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர். தளவாய்புரம் செட்டியார்பட்டி கண்மாய்க்கு எதிரே உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வந்த அப்பகுதியினர் சாலையை ஒட்டியுள்ள கண்மாயின் உள்ளே 20க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் சிதறி கிடந்துள்ளதை பார்த்தனர். அதில் உள்ள முகவரியை பார்த்தபோது செட்டியார் பட்டியை சேர்ந்தவை எனத்தெரிந்தது. அந்த வீடியோ வைரலானது. அவை யாருடைய அட்டைகள், கண்மாயில் வீசப்பட்டது எதனால் என வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி