காத்திருப்பு போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் நிர்வாகம் விட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி மூன்று கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார் இடையபொட்டல் தெருவில் கருங்கச்சைக்காரன், சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளது. இதனை கூமப்பட்டி, சேது நாராயணபுரம், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்த யாதவ சமுதாய மக்கள் வழிபட்டு வந்தனர். கோயில் காலியிடத்தை வாகன காப்பகம் நடத்த வாடகைக்கு விட்டிருந்தனர்.இந்நிலையில் 2023ல் இந்த இடம் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி, வாகன காப்பகம் நடத்த கோயில் நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. இது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்தாமல் விடப்பட்டுள்ளதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி மூன்று கிராம மக்கள் நேற்று மதியம் 12:00 மணி முதல், கோயில் செயல் அலுவலர் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செயல் அலுவலர் சக்கரையம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் மறியல் போராட்ட நடத்த போவதாக கூறி சென்றனர்.