அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் வைப்பவர்களுக்கு எச்சரிக்கை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பொது இடங்களில் எந்தவித பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது, மீறி வைப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், என டவுன் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.மதுரை ஐகோர்ட் சென்னை கிளை உத்தரவின்படி, பேனர்கள் அகற்றுவது குறித்தான ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. இதில் பிளக்ஸ் பேனர் அடிக்கும் உரிமையாளர்கள், பேனர்களை ஓட்டுபவர்கள் கலந்து கொண்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகரில் பொது இடங்களில் எந்தவித பிளக்ஸ் பேனர்களும் வைக்க அனுமதி இல்லை எனவும், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அகற்றவில்லை எனில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.