எஸ்.ஐ.,க்கு வாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு
சாத்துார்: சாத்துார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத எஸ்.ஐ.,க்கு வாரன்ட் பிறப்பித்து நீதிபதி முத்து மகாராஜன் உத்தரவிட்டார். ஏழாயிரம் பண்ணை கற்பகராஜா பயர் ஒர்க்ஸ்சில் 2018ல் ஏற்பட்ட வெடி விபத்தில் கொம்மங்கியாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பலியானார். இந்த வழக்கு சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போது ஏழாயிரம் பண்ணையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்த பிரகாஷ் விசாரித்தார். தற்போது கீழ ராஜகுலராமன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக உள்ளார். இவரை சாட்சியாக விசாரிப்பதற்காக நீதிமன்றம் சார்பில் 3 முறை சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு நீதிபதி முத்து மகாராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 3 சம்மன் வழங்கியும் விசாரணைக்கு எஸ்.ஐ., பிரகாஷ் ஏன் ஆஜராகவில்லை என கேட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 4க்கு ஒத்திவைத்து. அவருக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். எஸ்.ஐ., பிரகாஷிடம் கேட்டபோது, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை, என்றார்.