உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருவிருந்தான்பட்டியில் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்

திருவிருந்தான்பட்டியில் ரோட்டில் தேங்கும் கழிவு நீர்

சாத்துார்; சாத்துார் அருகே திருவிருந்தான் பட்டியில் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.திருவிருந்தான்பட்டியில் முறையான வாறுகால் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் காலியாக உள்ள இடத்திலும் ரோட்டிலும் செல்கிறது.ஆலம்பட்டியில் இருந்து திருவிருந்தான்பட்டி வழியாக கோல்வார்பட்டி செல்லும் ரோட்டில் திருவிருந்தான்பட்டியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது.இதனால் ரோடு சேதம் அடைந்து வருவதோடு இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அங்கன்வாடி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் கழிவு நீரில் கால் வைத்து நடந்து செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளது.திரு விருந்தான்பட்டியில் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுப்பதோடு முறையான வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை