மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
09-Oct-2024
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்
24-Oct-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது.அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரின் பல பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை ஆங்காங்கு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது .தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாய்களை அவ்வப்போது சரி செய்து வருகின்றனர்.நேற்று மாலை திருச்சுழி ரோடு தனியார் கலை கல்லூரி அருகில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து ரோடு வெள்ளக் காடானது. இதே போன்று நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் அருகிலும் குழாய் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. நகராட்சியினர் குழாய்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
09-Oct-2024
24-Oct-2024