மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி
14-Sep-2024
சாத்துார் : சாத்துார் நகராட்சி குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியதை தொடர்ந்து உடைந்த குழாய் உடனடியாக சரி செய்யப்பட்டது.சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் அயன் சத்திரப்பட்டி அருகே நகராட்சிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பகிர்மானக் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்தனர்.
14-Sep-2024