மேலும் செய்திகள்
சிவகாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
23-Apr-2025
சிவகாசி: சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ஓடி ஓடையில் கலந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனி, ரயில்வே பீடர் ரோடு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்தது. குழாய் உடைந்த இடத்தில் ரோடும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
23-Apr-2025