மேலும் செய்திகள்
திருவாடானையில் தருமபுரம் ஆதினம்
09-Jan-2025
திருச்சுழி : திருச்சுழி திருமேனிநாதர் கோயிலுக்கு வந்த தருமை ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்கழி மாத ஆன்மிக சுற்றுலா பயணமாக திருச்சுழி திருமேனிநாதர் சாமி கோயிலுக்கு தருமை ஆதினம் வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தார். கோயிலை சுற்றி பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
09-Jan-2025