உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டுத்தீ

மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டுத்தீ

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பக தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரிந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் அழகர்கோவில் வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ பற்றியது. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 2வது நாளாக காட்டுத்தீ பிளவக்கல் அணை பின்பகுதி வரை பரவியது. இதனையடுத்து கான்சாபுரம் வழியாகவும் வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3வது நாளாக நேற்றும் தீ எரிந்ததால், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை