உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காவிரி - வைகை - குண்டாறு திட்டம் நிறைவேறுமா? காத்திருக்கும் திருச்சுழி விவசாயிகள்

காவிரி - வைகை - குண்டாறு திட்டம் நிறைவேறுமா? காத்திருக்கும் திருச்சுழி விவசாயிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதுடன், விவசாயத்தை நம்பி இருக்கும் திருச்சுழி தொகுதி விவசாயிகள், நீர் ஆதாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். போதிய மழை பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். இப்பகுதிக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்ததையடுத்து, காவிரி -- வைகை -- கிருதுமால் -- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.14 ஆயிரத்து 200 கோடி நிதி தேவைப்படும் என அறியப்பட்டது. ரூ. 7 ஆயிரத்து 100 கோடி நபார்டு வங்கி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.கரூர் மாவட்டம் மாயனுாரில் இருந்து புதுக்கோட்டை வரை ஒரு பகுதியாகவும், அங்கிருந்து மானாமதுரை வரை 2வது பகுதியாகவும், தொடர்ந்து காரியாபட்டி பி.புதுப்பட்டி வரை 3வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் முதல் கட்ட பணிகளுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன.போதிய நிதி ஒதுக்காமல் 2, 3வது கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டன. விவசாயிகள் தொடர்ந்து போராடியதால், இந்த ஆட்சியில் நில ஆர்ஜிதம் செய்ய ரூ.290 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு சரி. இதுவரை ஒதுக்கவில்லை.தற்போது வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. நீர் ஆதாரத்தை உருவாக்கினால் மட்டுமே இப்பகுதி விவசாயம் செழிப்படையும். குடிநீர் பிரச்னை தீரும். கால்நடைகள் வளர்க்க முடியும். இத்திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மச்சேஸ்வரன், மாநில துணைத்தலைவர், காவிரி - வைகை - கிருதுமால் -குண்டாறு பாசன விவசாய சங்கம், கட்டனுார்: இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம். 4 ஆண்டுகளாக அரசு செவி சாய்க்கவில்லை. சமீபத்தில் பெய்த புயல், பருவ மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீணாக கடலுக்குச் சென்றது.இதனை தடுத்து வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என போராடி வருகிறோம். நீர் வளத்துறை அமைச்சர் நிதி ஒதுக்கி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதி விவசாயம் கேள்விக்குறியாகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ