உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்பாட்டுக்கு வருமா உயர் மின் கோபுர விளக்குகள்

செயல்பாட்டுக்கு வருமா உயர் மின் கோபுர விளக்குகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையத்தி லிருந்து கிருஷ்ணன்கோவில் வரை 10 இடங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக நிற்கிறது. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார்,தேவதானம் நகரங் களின் மையப்பகுதி வழியாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (எண் 744) செல்கிறது. இப்பாதையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது. இதனால் விபத்துகளும் தினமும் நடக்கிறது. இதனை தடுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ரோடு விரிவாக்கம், சிக்னல் போர்டுகள், ரோட்டில் வெள்ளை கோடுகள் வரைதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்தது. மேலும் ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனை, கலை மன்றம், அன்னப்பராஜா பள்ளி செக்போஸ்ட், புதுப்பட்டி பஸ் ஸ்டாப், மஞ்சம்மாள் பாலிடெக்னிக் பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்துாரில் வன்னியம்பட்டி விலக்கு, ஆண்டாள் தியேட்டர் பஸ் ஸ்டாப், சர்ச் சந்திப்பு பகுதிகளிலும், கிருஷ்ணன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரிலும், குன்னூர் பிரிவு ரோட்டிலும் என 10 இடங்களில் நவீன உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது. அமைத்து பல மாதங்கள் ஆன நிலையில் இதனை சம்பந்தப்பட்ட பகுதி உள்ளாட்சி அமைப்புகளான ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் ஏற்க மறுக்கின்றன. இதனால் உயர் மின் கோபுர விளக்குகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் 2024 நவம்பர் மாதம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காட்சி பொருளாகவே மின் கோபுர விளக்குகள் உள்ளது. எனவே, இதனை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டி களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி