உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனையாக உயருமா

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனையாக உயருமா

காரியாபட்டி: மல்லாங்கிணர், நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மல்லாங்கிணர், நரிக்குடி பகுதியில் மக்கள் தொகை, போக்குவரத்து அதிகரித்து வருகிறது. உள்ளூர், சுற்றியுள்ள கிராமத்தினர் காய்ச்சல் தலைவலி, பிரசவம் உள்ளிட்டவற்றிற்கு, இரு ஊர்களிலும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்ல இரு ஊர்களும் அருப்புக்கோட்டை பார்த்திபனூர், விருதுநகர் கல்குறிச்சி என முக்கிய வழித்தடங்களில் உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி ரோடு விபத்து நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அருப்புக்கோட்டை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் நீண்ட தூரம் கொண்டு செல்லும்போது தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர் பலி ஏற்படுகிறது.மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை