உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா

புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதி மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு பின் செயல்பாட்டிற்கு வந்ததால் மக்களும் ஆர்வத்துடன் இங்கு வந்து பஸ் ஏறி சென்றனர். மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்கள்இயக்கப்பட்ட பின் கூட்டம் குறைந்தது. இருப்பினும் தினசரி காலையில் இங்கிருந்து வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை குறையவில்லை. டூவீலர் நிறுத்த வசதி உள்ளது. இருப்பினும் வாகனப்பெருக்கத்தால் அவை நிறுத்த இடப்பற்றாக்குறை நிலவுகிறது.இதனால் டூவீலர்களை வெளியில் பாதுகாப்பின்றியும், மழை, வெயிலிலும் நிறுத்தும் சூழல் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் வாகன காப்பக வசதியை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. வாகன காப்பகத்திற்கு என தனி பாதை உள்ளது. அதன் வழியை தான் பயன்படுத்த வேண்டும். வெளியில் நிற்கும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை