உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி ரோடுகள் அகலப்படுத்தப்படுமா

விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி ரோடுகள் அகலப்படுத்தப்படுமா

நரிக்குடி: காரியாபட்டியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள விருதுநகர்,திருச்சுழி, நரிக்குடி ரோடுகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியிலிருந்து விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி வழித்தடத்தில் ஏராளமான பெரிய ஊர்கள் உள்ளன. எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். 3 வழித்தடங்களிலும் இரு வாகனங்கள் செல்லும் அளவிற்கு தான் ரோடு உள்ளது. டூவீலர், ஆட்கள் நடந்து செல்லும் போது, இரு வாகனங்கள் விலக இடமில்லாததால் டூவீலர், ஆட்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. விருதுநகர், நரிக்குடி ரோட்டில் அடிக்கடி டூவீலர் விபத்து ஏற்பட்டு வருகிறது. பொதுவாக நரிக்குடி, திருச்சுழி ரோட்டை ஒட்டி களிமண் தரையாக இருப்பதால் கனரக வாகனங்களை கீழே இறக்கினால் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. இதற்கு பயந்து கொண்டு பெரும்பாலான வாகன ஓட்டிகள் ரோட்டை விட்டு கீழே இறக்குவதில்லை. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம்உள்ள விருதுநகர், நரிக்குடி, திருச்சுழி ரோடுகளை அகலப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை