உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீ விபத்தில் பெண் காயம்

தீ விபத்தில் பெண் காயம்

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் சமையல் செய்வதற்காக சிலிண்டர் காஸ் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் காயம் அடைந்தார்.சிவகாசி அருகே திருத்தங்கல் பள்ளப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி முத்துமாரி 27. இவருக்கு 11 மாத இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில் சமையல் செய்து முடித்த பின்னர் சிலிண்டரை மூடாமல் தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார்.குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து சிலிண்டர் பற்ற வைத்த போது தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் முத்துமாரி 70 சதவீதம் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ