உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் விபத்து பெண் பலி, 5 பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் விபத்து பெண் பலி, 5 பேர் படுகாயம்

சின்னவாடி:விருதுநகர் அருகே சின்னவாடியில் மோகன்ராஜ், 60, என்பவருக்கு சொந்தமான, சத்ய பிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் நடந்த வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி, வதுவார்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி, 50, என்பவர் பலியானார்.இங்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு, பட்டாசு தயாரிப்பின்போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில், பல அறைகள் சேதமடைந்தன. அதிவீரன்பட்டியைச் சேர்ந்த அக்கா -- தங்கையான வீரலட்சுமி, 35, கஸ்துாரி, 33, உட்பட ஐந்து பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றும்போது, வதுவார்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நான்கு லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை