உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலெக்டர் அலுவலக லிப்டில் மாட்டிய பெண்

கலெக்டர் அலுவலக லிப்டில் மாட்டிய பெண்

விருதுநகர் : விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் நடந்த தட்டச்சர் நேர்முகத் தேர்வுக்கு ராஜபாளையத்தை சேர்ந்த சோபியா 30, நேற்று காலை வந்தார். இவர் லிப்டில் ஏறி சென்ற போது மின்தடையால் பாதியில் நின்றதால் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் சிறிது நேரத்தில் மின் விநியோகம் வந்து லிப்ட் வேலை செய்து வெளியே வந்தவர் சற்று மயக்க நிலையில் இருந்தார். இவருக்கு அரசு ஊழியர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !