மேலும் செய்திகள்
மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்
21-Oct-2024
விருதுநகர், : விருதுநகர் தெப்பம் அருகே பராமரிப்புக்காக நகராட்சி சிறுநீர் கழிப்பிடத்தின் தரைத்தளம் இடிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதமாகியும் பணிகள் துவங்காமல் உள்ளது. இதனால் மெயின் பஜார் வருவோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் தெப்பம் மேற்கு பஜாரில் ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. மார்க்கெட்டில் காய்கறி வாங்க வரும் ஆண்கள், மெயின் பஜார், தெப்பத்தை சுற்றி உள்ள கடைக்காரர்களும் இந்த கழிப்பிடத்தை உபயோகித்து வந்தனர்.நகராட்சி இந்த கழிப்பிடத்தை பராமரிப்பு செய்வதாக கூறி உள்ளே தரைத்தளத்தையும் சிறுநீர் கோப்பை, தண்ணீர் பைப்லைன், சுவர்களில் உள்ள டைல்ஸ் கற்களையும் 25 நாட்களுக்கு முன் உடைத்தனர்.ஒரு மாதமாகியும் இன்று வரை எந்த வேலையையும் துவங்கவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சிறுநீர் கழிப்பிட பராமரிப்புணிகளை உடனடியாக துவங்கி வேலைகளை முடிக்க வேண்டும்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறியதாவது: இவ்வழியாக நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர் என பலரும் வந்து செல்கின்றனர் ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடைத்த இடத்தில் தான் வேறு வழியின்றி கழிப்பிடமாக பயன்படுத்தும் சூழல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Oct-2024