உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹைமாஸ் விளக்குகளை  உயர்த்தும் பணி தீவிரம்

ஹைமாஸ் விளக்குகளை  உயர்த்தும் பணி தீவிரம்

விருதுநகர்; விருதுநகர் கலெக்டர் அலுவலக பாலப் பணிகள் விறுவிறுவென நடந்து வரும் சூழலில் ஹைமாஸ் விளக்குகளை உயர்த்தியுள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச்சாலைபாலப் பணிகள் இந்தாண்டு ஜன. ல் பூமி பூஜையுடன் துவங்கியது. மார்ச் மாதத்தில் கட்டுமான பணிகள் தீவிரமடைந்து தற்போது வரை நடந்து வருகிறது. முதற்கட்டமாக கலெக்டர் அலுவலகத்தை கடக்கும் சுரங்கப்பாதைகளை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதன் மேல்தள கட்டுமான பணிகள் நடந்துள்ளது. இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்டர் மீடியனில் அமைந்துள்ள ஹைமாஸ் விளக்குகளை உயர்த்தி அமைய உள்ள பாலத்தின் உயர்த்திற்கு உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் இரவு நேரங்களில் நடக்கும் பாலப்பணியின் போதும் இருட்டினால் சிரமங்கள் ஏற்படாத நிலை உண்டாகும். மேலும் ரோட்டின் இருபுறமும் தோண்டி கிராவல் கொட்டும் பணியும் நடந்து வருகிறது. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க வேகம் காட்டி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்து தவிர்க்க முடியாததாக உள்ளது. இருப்பினும் சில மாதங்கள் என்பதால் மக்கள் பொறுத்துக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை