உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் வராததால் அவதி

100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் வராததால் அவதி

சாத்துார் சாத்துார் ஊராட்சிஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு சம்பளம் வராததால் அவதிப்படுகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் உள்ளன. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப் பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள் பலரும் கண்மாய்க்கு நீர் வரத்து கால்வாய் வெட்டுதல்,ஊராட்சியில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்குதண்ணீர் ஊற்றி பராமரித்தல் சாலையை செப்பனிடுதல் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.நாள் ஒன்றுக்கு ரூ280 சம்பளமாக வழங்கப்படுகிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதியில் வசிப்பவர்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்த படுகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வேலை செய்தும் இவர்களுக்கு சம்பளம் தரப்படாததால்மகளிர் குழு மற்றும் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ