| ADDED : நவ 18, 2025 03:42 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் 2 நாட்கள் காய்கறிகள், பழங்கள், தெர்மாகோல் பயன்படுத்தி வடிவங்கள் சிலைகள் செய்யும் பயிற்சி நடந்தது. இதில் ஐரோப்பிய நாட்டின் பிரைடன் நகரில் உள்ள வேல் சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட்டில் பணிபுரியும் செப் ஸ்டீபன் ராஜ் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். மாணவர்களுக்கு தெர்மாகோல், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை பயன்படுத்தி விதவிதமான உருவங்கள் வடிவங்கள் செய்வதற்கு பயிற்சி அளித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன், நிர்வாக குழு தலைவர் முருகேசன், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் வெள்ளைச்சாமி கலந்து கொண்டனர்.