மேலும் செய்திகள்
பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்
12-May-2025
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:விருதுநகரில் 2026 குடியரசு தினவிழாவில் 'பத்ம விருது' பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமூக சேவை, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில், அறிவியல், பொறியியல், விவசாயம், தொல்லியல், கட்டடக்கலை, விளையாட்டு, வனவிலங்கு பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவராக இருக்க வேண்டும்.மேலும் விவரங்களை https://awards.gov.inஎன்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31. இணையத்தில் பதிவு செய்த பின் அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கையேடாக தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்களை ஜூன் 9க்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-May-2025