இளையோர் திருவிழா
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நேரு யுவ கேந்திரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் நடக்க உள்ள பல்வேறு போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.டிச. 12ல் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடக்கும் போட்டியில் அறிவியல் கண்காட்சி -தனிநபர், குழு போட்டிகள், கவிதை, ஓவியம், அலைபேசி புகைப்பட போட்டிகள், குழு நடன போட்டிகள் நடக்கிறது. 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். கலைப்போட்டிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியடைவர்.முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். 2024.dyf2024.gmail.comஎன்ற மெயில் முகவரியில் டிச. 10 மாலை 5:00 மணிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 94894-62140, 04562-252770, தொடர்பு கொள்ளலாம், என்றார்.