மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -3
5 hour(s) ago
சிவகாசி: ஊராட்சிகளில் உள்ள வங்கி பாஸ் புத்தகம், செக் புத்தகங்களை ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சிகளில் பொறுப்பில் உள்ளவர்களின் பதவி காலம் அக்., 24ம்தேதியுடன் முடிகிறது. தற்போது ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பில் உள்ளவர்கள் ஊராட்சி நிதியினை வங்கி செக் மூலம் கையாள்கின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், ஊராட்சிகளில் ஒன்று முதல் மூன்று வரையிலான கணக்குகளின் வங்கி பாஸ் புத்தகம், செக் புத்தகங்களை, உடனடியாக ஒன்றிய ஆணையாளரிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஊராட்சி பரமாரிப்பு கணக்கு, அரசு திட்ட நிதி கணக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணக்கு உள்ள பாஸ் புத்தகம், செக் புத்தகங்களை ஊராட்சி எழுத்தர்கள் மூலம் ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும், ஊராட்சி ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு ,ஒன்றிய ஆணையாளர் அனுமதியுடன் வங்கி செக் பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
5 hour(s) ago