உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் வேட்டி, துண்டு கொடுத்த தி.மு.க.,வினர் போலீசாரை கண்டு ஓட்டம்

ராமநாதபுரத்தில் வேட்டி, துண்டு கொடுத்த தி.மு.க.,வினர் போலீசாரை கண்டு ஓட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓட்டுக்கு வேட்டி, கொடுத்த தி.மு.க., வேட்பாளர் முருகானந்தம் உட்பட பலர் போலீசார் வருவதை கண்டவுடன் ஓடிவிட்டனர். ராமநாதபுரம் நகராட்சி 12வது வார்டில் தி.மு.க., வேட்பாளர் முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு ஓட்டுக்காக தாயுமான சுவாமி கோயில், முத்துராமலிங்க சுவாமி கோயில், கள்ளர் தெரு பகுதியில் வீடு, வீடாக வேட்டி, துண்டு வழங்கி ஓட்டு கேட்டார். இதையறிந்த, இவரது தம்பியும் அ.தி.மு.க., வேட்பாளருமான முனியசாமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பஜார் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அங்கு சென்ற போது, தி.மு.க., வினர் ஓடிவிட்டனர். போலீசார் வீடுகளில் கொடுக்கப்பட்ட வேட்டி, துண்டுகளை பறிமுதல் செய்து, தப்பியோடிய தி.மு.க.வினரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி