மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
மேட்டூர்:மேட்டூர் அணை பவளவிழா நினைவு கோபுரம் கட்டுமானப் பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் உள்ளது. மேட்டூர் அணை, 1925 ஜூலை 20ல் துவங்கி, 1934 ஆக.,21ல் கட்டி முடிக்கப்பட்டது. 2008 ஆக., 21ல் மேட்டூர் அணை பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்தது. பவளவிழா நினைவாக, மேட்டூர் அணை வலதுகரை பகுதியில், 75 அடி உயர கோபுரம் கட்ட, தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.அதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை சார்பில், அணை வலதுகரை பகுதியில், ஒரு கோடி ரூபாய் செலவில், ஆறு பேர் பயணிக்கும் அளவில் லிப்ட் வசதியுடன், 75 அடி உயரத்தில், பவளவிழா நினைவு கோபுரம் கட்டும் பணி துவங்கியது. இரு ஆண்டுக்குப் பின், தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து, பவளவிழா கோபுரம் திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் சென்று, அணையைப் பார்வையிடும் வகையில், கோபுரத்தின் உச்சியில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில், தமிழக அரசு பவளவிழா கோபுரத்தைத் திறந்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 33