உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்

தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்

கரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மீது, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

புகார் மனு:

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளார்.

உண்ணாவிரதம்:

மேலும், இரண்டு பேரையும் கண்டித்து வரும் 28 ம் தேதி(ஏப்.,28, வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்