உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவில் சிறப்பு கமிஷனராக, செயல்பட்டு வந்த பத்தனம்திட்டா மாவட்ட விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட், எஸ்.எச்.பஞ்சாபகேசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய சிறப்பு கமிஷனராக கோட்டயம் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.ஜெகதீசை நியமித்து, கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் தான், பஞ்சாபகேசன் நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு, மாவட்ட நீதிபதிகளை மட்டுமே நியமிப்பது என, ஐகோர்ட் ஏற்கனவே எடுத்த முடிவின் படி, தற்போது மாவட்ட நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை